முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதுவராக பணியாற்றிய உதயங்க வீரதுங்கவின் சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் இன்று(21) நிராகரித்துள்ளது.
உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள சர்வதேச பிடியாணை திரும்பப் பெறுமாறும் வெளிநாடுகளுக்கு பயணிக்க அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறும் சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
எனினும், குறித்த கோரிக்கையை நிராகரித்து பேசிய நீதவான், உதயங்க வீரதுங்க செய்ய வேண்டியது, நீதிமன்ற உத்தரவை திரும்ப பெறுமாறு சட்டத்தரணியின் ஊடாக கோரிக்கை விடுப்பதல்ல எனவும் அவர் பொலிஸ் அல்லது நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மிக் விமான கொள்வனவு தொடர்பான கொடுக்கல், வாங்கலில் நடந்த பல கோடி ரூபா ஊழலில் உதயங்க வீரதுங்கவுக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)