கைது செய்யப்பட்டுள்ள உதயங்கவீரதுங்க தொடர்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக ஏழு பேர் அடங்கிய குழுவொன்று இன்று(07) டுபாய்க்கு புறப்பட்டு செல்வுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர், சட்ட மாஅதிபர் திணைக்கள அதிகாரிகள், குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினர், குற்றப்புலனாய்வுப் பிரிவினர், வௌிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் குறித்த குழுவில் அடங்கியுள்ளனர்.
ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கடந்த 4 ஆம் திகதி டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது