தன்னை கைது செய்வதற்காக கோட்டை நீதவான் நீதிமன்றினால் விடுத்துள்ள பிடியானையினை மீளப்பெறுமாறு கோரி, ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவினை உயர் நீதிமன்றம் இன்று(11) நிராகரித்துள்ளது.
உயர் நீதிமன்றில் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தமது வங்கிக் கணக்கை தடை செய்துள்ள உத்தரவினை நீக்குமாறும், பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவின் பிரதம பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரான்சிஸ் இடம் ரூ.10 கோடி இழப்பீடு கோரியும் உதயங்க வீரதுங்க குறித்த அடிப்படை மனுவினை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#rishma