உதயங்க வீரதுங்க கைது செய்ததாக கூறப்படும் செய்தியினை FCID மறுப்பு…

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, டுபாயில் நேற்று(26) காலை அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் ரவி வைத்தியாலங்கார தெரிவித்ததாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று வெளியிட்டிருந்த நிலையில், அதனை மையமாக சமூக வலைதளங்களில் குறித்த செய்தி பரவியிருந்தது.

எனினும், குறித்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு நிராகரித்துள்ளதோடு, அதனை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியாலங்கார உறுதிப்படுத்தியுள்ளார்.

நிதிக்குற்றப் விசாரணைப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே டுபாய் அதிகாரிகள் உதயங்க வீரதுங்கவை கைது செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

மிக் விமான கொடுக்கல் வாங்களின்போது 7.833 மில்லியன் டொலர்களை மோசடி செய்ததாக உதயங்க வீரதுங்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு, கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

செய்தித்தாள் தகவல்

 

-Rishma