உதய கம்மன்பிலவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி.

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய இந்தியாவில் நடைபெறும் திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொள்ள அவர் இந்தியா செல்லவுள்ளார்.

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை குறித்த திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது. அதேவேளை டிசம்பர் 9ஆம் திகதி முதல் 20 ஜப்பானில் நடைபெறவுள்ள மாநாடொன்றில் கலந்துகொள்ளவும் உதய கம்மன்பிலவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.