உதவி பொலிஸ் பரிசோதகர்கள் 595 பேருக்கு பதவி உயர்வு….

உதவி பொலிஸ் பரிசோதகர்கள் 595 பேரும், பொலிஸ் பரிசோதகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்ட அனைவருக்கும் கடந்த 14 ஆண்டுகளாக பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பதவி உயர்த்தப்பட்டுள்ள உதவி பொலிஸ் பரிசோதகள் 595 பேரில், 56 பேர் பெண் உதவி பொலிஸ் பரிசோதகள் என்பது குறிப்பிடத்தக்கது.