உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து – 8 பேர் உயிரிழப்பு…

உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் சாம்பவாத் பகுதியில் இன்று காலை 8 பேர் ஒரு காரில் பயணித்த வேளையில், மலைப்பாதையில் சவாலா என்ற இடத்தில் வளைவில் திரும்பியபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென பள்ளத்தாக்கில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்து பற்றி தகவல் அறிந்த பொலிசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.