கொழும்பு, கோட்டை – காங்கேசன்துறை வரையான உத்தரதேவி புதிய புகையிரதத்தின் வெள்ளோட்டம் இன்று(27) முன்னெடுக்கப்படுகின்றது.
இன்று காலை கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றதுடன், இந்த நிகழ்வில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, இந்த நிகழ்விற்கு இணையாக, இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான துண்டுப்பிரசுரங்களை விநியோக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டுள்ளார்.