உத்தராகண்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

இந்தியாவின் உத்தராகண்டில் நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.

கிழக்கு டெஹ்ராடூனில் இருந்து 121 கி.மீ தொலைவிலும், கடலில் 30 கி.மீ. ஆழத்திலும் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் புதுடில்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.