உத்தியோகபூர்வ வாகனத்தில் டொப் லெஸ்ஸாக செல்பீ படம் பிடித்த பொலிஸ் உத்தியோகத்தர் நெருக்கடியில்

உத்தியோகபூர்வ பொலிஸ் வாகனத்தில் துப்பாக்கியை ஏந்தியவாறு டொப்லெஸ்ஸாக செல்பீ படம்பிடித்த மெக்ஸிகோ பெண் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவர் நெருக்கடியில் சிக்கியுள்ளார்.

நில்டோ கார்சியா எனும் இப்பெண் மெக்ஸிகோவின் வட பிராந்திய நகரான எஸ்கோபெடோ நகரில் பணியாற்றியவர். அவர் தனது பொலிஸ் ரோந்து வாகனத்திலிருந்தவாறு பிடித்துக்கொண்ட செல்பீ படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார்.

இப் புகைப்படம் மெக்ஸிகோ பொலிஸ் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு வந்ததையடுத்து, நில்டோ கார்ஸியா கட்டாய விடுமுறையில் அனுப்பப் பட்டுள்ளார். அவர் பணியிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதேவேளை இவ் விடயம் குறித்து பல நாட்கள் மௌனம் சாதித்த நில்டோ கார்சியா, அண்மையில்  தான் மன்னிப்பு கோருவதாக பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

“ பணியில் ஈடுபட வேண்டிய நேரத்தில் இவ்வாறு படம் பிடித்துக் கொண்டமைக்காக நான் மன்னிப்பு கோருகிறேன். குறிப்பாக எனது இரு மகள்கள், கணவர், பெற்றோர் மற்றும் முழுக் குடும்பத்தினருக்கும் பெரும் அபகீர்த்தியை நான் ஏற்படுத்தியுள்ளதாக உணர்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.