உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனா நோக்கி விஜயம் செய்துள்ளார்.
நேற்று (12) இரவு 09.10 மணியளவில் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விஜயத்தில் பிரதமருடன் 17 பேர் உடனிருந்ததாகவும், அவர்கள் சீனாவின் க்வென்சோ நோக்கி சென்றதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, கைதொழில் மையங்களை, தொழிலநுட்ப மையங்கள், நிதி நிலையங்கள், ஆக்கத்திறன் தயாரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பொருளாதார பொருளாதார அபிவிருத்தி மத்திய நிலையங்களில் கண்காணிப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஈடுபடவுள்ளார்.