உபாதைக்குள்ளான காலினை “ஸ்கேன்” செய்ய மேத்யூஸ் மறுத்தது ஏன்..? Cricinfo அம்பலம்..

இலங்கைக்கான சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டு அவுஸ்திரேலிய அணியானது விளையாடிய 4வது ஒருநாள் போட்டியின் போது ஏஞ்சலோ மேத்யூஸ் உபாதைக்கு உள்ளாகியமை யாவரும் அறிந்ததே.

காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக மேத்யூஸ் அந்நேரமே மைதானத்தை விட்டும் வெளியேறியிருந்த நிலையில் இறுதி பந்துகள் இரண்டிற்கும் முகம் கொடுக்க மீண்டும் மைதானத்திற்கு வருகை தந்திருந்தார்.

போட்டி முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த தினேஷ் சந்திமால், அடுத்த போட்டிகளில் அநேகமாக மேத்யூஸ் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்திருந்தார்.

பிற்பாடு, மேத்யூஸ் மீதமிருந்த ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

“எவ்வாறாயினும், ஏஞ்சலோ மேத்யூஸ் உபாதைக்கு உள்ளாகிய தனது பாதத்தினை CT ஸ்கேன் பரிசோதனை எடுக்க மறுத்துள்ளமைக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை..”

மேத்யூஸ் MRI பரிசோதனைக்காக காத்திருப்பதாக கடந்த காலங்களில் தகவல் வெளியிடப்படிருந்தன.

தனது தலைமையில் அணி இருக்கும் போது, மேத்யூஸ் பந்து வீசவில்லை எனவும், அவர் தலைமையில் அணி இருக்கையிலேயே ஒருவருடம் மேத்யூஸ் உபாதையில் இருந்ததாகவும் அண்மையில் ஓய்வுபெற்ற திலகரத்ன டில்ஷான் கூறிய கருத்தானது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பேசு பொருளாக மாறியுள்ளது என்றால் மிகையாகாது.

டில்ஷான் ஓய்வு பெற்று அடுத்துவரும் போட்டியிலேயே மேத்யூஸ் உபாதைக்கு உள்ளாகியமையும் குறிப்பிடத்தக்கது.