உபுல், தசுன் மற்றும் நிரோஷன் ஆகியோருக்கு அவசர அழைப்பாணை..

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5வதும் இறுதியுமான ஒருநாள் போட்டிக்காக இலங்கை அணி சார்பில் மூன்று வீரர்கள் உளவாங்கப்பட்டுள்ளனர்.

உபுல் தரங்க, தசுன் சானக மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரே இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அணியுடன் குறித்த மூவரும் இன்று(02) ஒன்றுசேரவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.