(FASTGOSSIP|COLOMBO) – ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முக்கிய தொடராக பார்க்கப்படும் ஆஷஸ் தொடர் நேற்று ஆரம்பமானது.
இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி வீரரான டேவிட் வார்னரை இங்கிலாந்து ரசிகர்கள் கடுப்பேற்றியுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது உப்புத்தாளை கொண்டு பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியா தலைவர் ஸ்டீவன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டது. ஐ.பி.எல் போட்டியில் இருந்தும் ஸ்மித், வார்னருக்கு தடை விதித்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், நேற்று ஆரம்பமான ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரில் நாணய சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலிய தலைவர் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
டேவிட் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர். வார்னர் 02 ஓட்டங்களில் வெளியேறும் போது அவரை கடுப்பேற்றும் விதமாக, மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் பலரும் உப்புத்தாளை வெகுநேரம் காண்பித்து வழியனுப்பியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.