உமா ஓயா திட்­டத்துக்கு அண்­மித்­த­தாக வசிக்கும் சுமார் 5,000 குடும்­பங்­களை அகற்ற நட­வ­டிக்­கை..

உமா ஓயா திட்டத்தினால் ஏற்­பட்­டு­ வரும் பாதிப்­பு­களை கருத்திற் கொண்டு திட்­டத்துக்கு அண்­மித்­த­தாக வசிக்கும் சுமார் 5,000 குடும்­பங்­களை அகற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வுள்­ளது.

குறித்த திட்டத்தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களை பாது­காப்­பாக வாழ சிறிய நக­ர­மொன்றை உரு­வாக்­கவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

உமா ஓயா சுரங்க வேலைத்­திட்டம் முன்னெடுக்கப்பட்டதில் இருந்து பதுளை, பண்­டா­ர­வளை மற்றும் மொன­ரா­கலை ஆகிய பகு­தி­களில் அதி­க­ளவில் மக்கள் பாதிக்­கப்­ப­ட்டு­ வ­ரு­கின்­றனர்.

இந்­நி­லையில் முதற்­ கட்­ட­மாக பதுளை மாவட்­டத்தில் 5000 குடும்­பங்­களை அகற்­று­மாறு ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ள­தாக இடர்­மு­கா­மைத்­துவ அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

மாவட்­டத்தில் காணி தட்­டுப்­பாடு நில­வு­வ­துடன், புதிய வேலைத்­திட்­டங்­களின் கீழ் வீடு­களை வழங்­கு­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ள­தா­கவும் இதன் பிரகாரம், பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான சிறிய நகரமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மேலும் தெரிவித்துள்ளார்

 

(rizmira)