உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டு மத்திய நிலையம்..

உமா ஓயா செயற்திட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்காக விசேட முகாமைத்துவ அனர்த்த திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக விசேட அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டு மத்திய நிலையம் ஒன்றினை பண்டாரவளை நகரை அண்டிய பிரதேசத்தில் ஸ்தாபிப்பதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

எதிர்வரும் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழையின் போது உமா ஓயா நீர்த்தேக்கத்தில் ஏற்படும் நீர்க்கசிவு காரணமாக பாதிக்கப்படும் பிரதேசங்கள் விசேடமாக முகாமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியது அவசியம் என இங்கு மேலும் வலியுறுத்தப்பட்டது.

 

(rizmira)