உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 3 திட்டம் நடைமுறைக்கு..

உமா ஓயா அபிவிருத்தி திட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக 3 திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று(20) பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

தயபரா எல்ல நீர்த்தேக்கத்தின் மூலம் உமா ஓயாத்திட்டத்தினால் 55 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேருக்கு தேவையான நீரை விநியோகிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மூன்று நீர்த்திட்டங்கள் மூலம் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 352மில்லியன் ரூபா இதற்காக ஒதுக்கபட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

###