உமா ஓயா நட்டஈடுகள் செப்டம்பர் 15 இற்கு முன்னர்..

உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் நட்ட ஈடுகளை வழங்கி முடிக்க மகாவலி அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

மகாவலி அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நேற்று(13) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது குறித்த இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய பல தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

நட்டஈட்டை வழங்குவதற்கான மதிப்பீட்டு பணிகளை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்வதாக மதிப்பிட்டு அதிகாரிகள் குறித்த கூட்டத்தின் போது தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த நட்டஈட்டை வழங்குவதற்காக அரசாங்கத்தால் 300 மில்லியன் ரூபா நிதி மாவட்ட செயலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் காரணமாக சேதமடைந்த 06 சிறிய குளங்களை எதிர்வரும் மழை காலத்துக்கு முன்னர் மறுசீரமைப்பதற்காக 100 மில்லியன் ரூபா வரையறைக்கு உட்பட்டதாக ஒதுக்கீடுகளை விடுவித்தல் மற்றும் மறுசீரமைப்பு செயற்பாடுகளை துரிதமாக நிறைவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

(rizmira)