உமா ஓயா வேலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்டோர் முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டம்.. – நீதிமன்றம் தடையுத்தரவு

உமா ஓயா வேலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்டோர் ஒன்றியத்தின் அமைப்பாளர் சமந்த வித்தியாரத்ன உள்ளிட்டோருக்கு பதுளை நீதவான் மயந்த சமரதுங்க தடையுத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்.

உமா ஓயா வேலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்டோர் ஒன்றியத்தினால் இன்று(11) போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் காலை 08.00 மணி முதல் மாலை 04.30 வரையான காலப்பகுதியில் பதுளை மாவட்ட செயலகம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகம் போன்ற அரச நிறுவனங்களுக்குள் அத்துமீறி நுழையக் கூடாது என, நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

(rizmira)