(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020ம் ஆண்டு க. பொ.த உயர்த்தரத்திற்கு செல்லும் மாணவர்கள் நாளை முதல் ஒன்லைன் (online) முறை மூலம் விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு இன்று(11) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கல்வி அமைச்சின் www.info.moe.gov.lk என்ற இணையத்தள பக்கத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் எனவும் விண்ணப்பதாரர் ஒருவருக்கு 10 பாடசாலைகள் வரை விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
எதிர்வரும் ஜுன் மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது
