(FASTNEWS|COLOMBO) – 2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சைகள், கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இன்று(30) நள்ளிரவுடன் நிறைவுசெய்ய வேண்டும் என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் அனைத்தும் நாளை(30) நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளன.
அதற்கு பின்னர் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகள் நடாத்தப்படும் பட்சத்தில் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 5ஆம் திகதி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் 4 ஆம் திகதி நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.