கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு, வினாக்களை தெரிவு செய்வதற்காக மேலதிக நேரத்தை வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், பகுதி 2 வினாத்தாளுக்காக மேலதிகமாக 15 நிமிடங்கள் வழங்கப்படவுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
வினாக்களை தெரிவு செய்யும் போது மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.