க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியின் இரண்டாம் கட்ட நடவடிக்கை, எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்வதற்காக 24 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், இவற்றில் 4 பாடசாலைகள் முழுமையாக மூடப்படவுள்ளதுடன், ஏனைய 20 பாடசாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும் எனவும் அறிவித்துள்ளது.