உயர்தர பரீட்சையின் மீள்பரிசோதனை பெறுபேறுகள் தொடர்பில் சிக்கல் இருப்பின் தெரிவிக்குமாறு வேண்டுகோள்…

2017 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் மீள்பரிசோதனை பெறுபேறுகள் தொடர்பில் ஏதாவது சிக்கல் இருப்பின் அது தொடர்பில் விசாரணை செய்ய பரீட்சைகள் திணைக்களத்தினால் தொலைபேசி இலக்கங்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மீள் பரிசோதனை பெறுபேறுகள் கடந்த 11 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன் அதனை www.donets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பெறுபேறுகள் தொடர்பில் ஏதாவது சிக்கல் இருப்பின் 011 2 78 42 08 , 011 2 78 45 37, 011 31 88 350 மற்றும் 011 31 40 314 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்து விசாரணை செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

​மேலும் பரீட்சைகள் திணைக்களத்தின் அவசர இலக்கமான 1911 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்தும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.