உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள்…

2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் ​நேற்றிரவு(27) வெளியாகியுள்ளன.

நாடளாவிய ரீதியில் அதிக புள்ளிகளுடன் சிறந்த பெறுபேற்றை மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாத்தறை சுஜாதா வித்தியாலய மாணவி திலினி சந்துனிகா அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளதுடன் பௌதீக விஞ்ஞான பிரிவில் பிரிவில் (physical science) பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறீதரன் துவாரகன் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இதுதவிர மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் துலானி ரசந்திகா என் மாணவி வர்ததகப் பிரிவில் அகில அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அதேநேரம் கலைப்பிரிவில் முதலாம் இடத்தை இரத்தினபுரி சத்தர்மாலங்கார பிரிவினா கல்லூரியின், பிக்கு மாணவர் பத்பேரியே முனிந்தவங்ச தேரர் பெற்றுக் கொண்டார்.