உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவுடன் வகுப்புகள் நிறைவு

இம்முறை கல்வி பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை  எழுதவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்பு, கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறை என்பவற்றை எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவுடன் நிறுத்திக்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த இந்த தடையானது இம்மாதம் 27ஆம் திகதியிலிருந்து ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.புஷ்பக்குமார தெரிவித்துள்ளார்.