உயர்தர பரீட்சை மத்திய நிலையங்களில் ​அலைபேசி சமிஞ்ஞைக்கு தடை…

எதிர்வரும் 06ம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மத்திய நிலையங்களாக செயற்படும் சகல மத்திய நிலையங்களுக்கும் அண்மையில், அலைபேசிகளுக்கான சமிஞ்ஞையில் தடையை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ.பூஜித தெரிவித்தார்.

தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுக்கள் மற்றும் இலங்கை விமானப்படையின் சமிஞ்ஞை படைப்பிரிவின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதியன்று நிறைவடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.Rishma