கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை வினாக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கம்பஹாவை சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக வகுப்பு நடாத்தி வந்த ஆசிரியரின் தந்தை மற்றும் மகன் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இம்முறை இடம்பெற்ற உயர்தர பரீட்சையின் இராசாயனவியல் வினாப்பத்திரத்தில் இடம்பெற்ற சில வினாக்களை வெளியிட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது..