இவ்வருட உயர்தர இரசாயனவியல் வினாத்தாளை கசியவிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர் உள்ளிட்ட மூவரையும் கம்பஹா நீதிமன்றம் இன்று(04) பிணையில் விடுவித்துள்ளது.
வினாத்தாள் கசிவு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவர் சார்பாக வழக்கறிஞர்களால் முன்வைக்கப்பட்ட பிணை மனுவை ஆராய்ந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கம்பஹா நீதிவான் நீதிபதி குறித்த மூவரையும் இன்று(04) பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.
இதேவேளை, குறித்த மாணவனுக்கு பரீட்சை எழுதுவதற்கு பரீட்சைகள் ஆணையாளர் வாழ்நாள் தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)