வவுனியா கோவில்குளம் மற்றும் சிவன்கோவிலடி, ஆகிய இடங்களில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடை காரணமாக அப்பிரதேச மக்களும் வர்த்தகர்களும் பெரும் அசௌகரியங்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயர் அழுத்தம் மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாலேயே இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த மின் தடையானது, இன்று காலை 8.00 மணியில் இருந்து மாலை 5.30 மணிவரை வவுனியா கோவில்குளம். சிவன்கோவிலடி மற்றும் யாழ்ப்பாணம் இடைக்காட்டு பகுதிகளிலும் அமுல்படுத்தப்பட்டிருக்கும் என மின்சாரபை அதிகாரி கூறியுள்ளார்.