பொலிஸ் சேவையில் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் புதிதாக உள்வாங்கப்படுவதால் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட 58 பேருக்கு உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இடமாற்றம் பெற்றவர்களுள் 05 உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும், 21 பிரதான பொலிஸ் பரிசோதகர்களும், 32 பொலிஸ் பரிசோதகர்களும் அடங்குவர்.
பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படியும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடனும் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்கள் பெயர் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சமஷ்டி பதிவாளர்கள் திணைக்களத்தினால்…
சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் பணிபுரிந்த…
வைரஸ் AH1N1 இனது எச்சரிக்கை காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் , பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் நாளை(04) மதியம் 12.00…