(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அம்பாறை உகண விமானப்படை முகாமைச் சேர்ந்த இராணுவ விஷேட படைப்பிரிவின் வீரர் ஒருவர் விமான சாகச பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பரசூட் செயலிழந்தமையால் கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்தார்.
இவர் சுமார் 7000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவரின் இறுதிக் கிரியைகள் (22) மாலை இடம்பெற்றது. இந்த விடயம் அனைவரும் அறிந்த விடயமாக இருந்தாலும் இறுதிக் கிரியையின் பின்னர் அந்த குடும்பத்தின் நிலை என்ன? படைப்பிரிவின் வீரரின் மனைவி ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கையில், பலரின் உள்ளங்களை கலங்கவைத்தது எனலாம்.. “..
கடந்த 19 திகதி 8.30 மணியளவில் எனது மகளுடன் இறுதியாக கதைத்தார் அவர் பிள்ளைகளின் கல்வி தொடர்பிலேயே அதிகமாக பேசினார். அவர்களுக்கு நல்ல கல்வியை கொடுத்து நல்ல இடத்திற்கு கொண்டுவரவேண்டும் என என்னிடமும் கூறினார்.
அவர் வேலைகளுக்கு சென்றால் 15 அல்லது 20 நாட்களுக்கு பின்னர்தான் விட்டுக்கு வருவார். அதுவரையில் நாங்கள் பயத்தில் தான் இருப்போம். நான் எனது பிள்ளைகளை நினைத்து எனது கவலைகளை கட்டுப்படித்திக் கொள்கிறேன். எனக்கு தற்போது ஒரு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கான செலவுகள் இருகிறது. எனது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை அரசாங்கள் உதவியினால் எனக்கு பெறும் உதவியாக இருக்கும். தற்போது நான் கர்ப்பிணி தாயாக இருகிறேன் இன்னும் 2,3 மாதங்களில் குழந்தை கிடைக்கவுள்ளது.
இந்த குழந்தையை பார்ப்பதற்கு அவர் இல்லை. எனது கணவர் வீட்டில் இருந்ததை விட சேவையில் இருந்த காலமே அதிகம். யுத்ததிற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் சேவை செய்தார் அவரது சேவை காலம் 24 வருடங்களாகும்.
இவர் 2009 ஆண்டின் பின்னர் விமானப் படையின் பரசூட் பரிவுக்கு இணைவதாக தெரிவித்த போது ஆரம்பத்தில் நான் விருப்பமில்லாமல் இருந்து பின்னர் நான் விருப்பத்தை தெரிவித்தேன்.
எனது கனவர் எனது நாட்டிற்காக தனது உயிரை அர்ப்பணிப்பு செய்தவரின் மனைவி என்பதில் பெறுமை கொள்கிறேன்…'”