(FASTNEWS | COLOMBO) – ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட ஜனாதிபதி விசாரணைக் குழுவின் அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்திருந்தார்.
குறித்த குழுவின் இறுதி அறிக்கைகள் இந்நாட்களில் தயார்படுத்தப்பட்டு வருவதாகவும், ஜனாதிபதி செயலாளர் காரியாலயம் பாராளுமன்றுக்கு இது தொடர்பிலான அறிக்கை ஒன்றினை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்கவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.