(FASTNEWS| COLOMBO) – கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற அனர்த்தத்தில் சிக்குண்டவர்கள், சேதமடைந்த தேவாலயங்களை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கு நிதி உதவி வழங்குவதற்கு விருப்பமுள்ள நபர்களுக்காக, விஷேட வங்கிக் கணக்கு ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இந்த வங்கிக் கணக்கு, கொழும்பு கொமர்ஷல் வங்கிக் கிளையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த வங்கிக் கணக்கு, கொழும்பு போராயரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கி கணக்குக்கு, “2019 உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு, தேவாலயங்களை புனரமைப்பதற்கான விஷேட நிதி” என்று பெயரிடப்பட்டுள்ளது.
பொரளை கொமர்ஷல் வங்கி கிளையின் கணக்கிலக்கம் 1190038741 என்ற கணக்கு இலக்கமானது, கொடையாளிகள், நன்கொடைகளை வழங்க முடியும் என்று, பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.