உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பிலான குழு அறிக்கை எதிர்கட்சித் தலைவரிடம் கையளிப்பு….

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் முன்ளாள் பாதுகாப்பு துறை பிரதானிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவும் சில எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்த போது எதிர்கட்சித்தலைவர் இந்த விடயத்தை ஜனாதிபதியிடம் கூறியதாக, அந்த சந்திப்பில் கலந்துக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.