உறவாட மறுக்கும் யாஸிதி பெண்களை உயிருடன் எரித்துக்கொன்ற ஐ.எஸ் அமைப்பு

சிறுபான்மை இனத்தவரான குர்து யாஸிதி பெண்களை ஐ.எஸ் அமைப்பினர் கடத்தி சென்று பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஐ.எஸ் உறுப்பினர்களின் விருப்பத்தை நிறைவேற்றாத பெண்களை அவர்கள் கொடூரமாக கொலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விருப்பத்திற்கு இணங்க மறுத்த 19 யாஸிதி பெண்களை இரும்புக்கூண்டில் அடைத்து பின்னர், அந்த கூண்டுகளை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் இழுத்து வந்து கூண்டுக்குள்இருந்த 19 பெண்கள் மீது திராவகம் ஊற்றி தீயிட்டு எரித்து கொன்றுள்ளனர்.

கண் முன் நிகழ்ந்த கொடூரத்தை தடுக்க முடியாமல் பொதுமக்கள் தவித்துள்ளனர்.

இதுவரை, 3,000 யாஸிதி இன பெண்கள் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசம் உள்ளனர் என தெரியவந்துள்ளது.