அவ்வணியில் ஒரு ஆண்டு இடைவேளைக்கு பின்னர் வேகப்பந்து வீரர் ரெண்டி சட்டரா மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் பான்யன்ஹரவும் உள்வாங்கப்பட்டுள்ளார். சிபன்கா, முசாரபனி, பிரைன் விட்டோரி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஹமில்டன் மசஹட்சா தலைமையிலான சியன் வில்லியம்ஸ், சட்டரா, மசஹட்சா, பான்யாசார, பீட்டர்மூர், சிக்கும்புர, சிக்கந்தர் ராசா, ரிச்சமண்ட், லுகே ஜான்வே, சிசோர, நெவிலிமட்சிவ, மல்கோல் வாலர், சிரெம்மர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் மார்ச் 8ஆம் திகதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரையில் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில் அதில் பங்கேற்கும் 16 அணிகளில் 15 நாட்டு அணிகள் தமது விபரத்தை அறிவித்துள்ளன இலங்கை கிரிக்கெட் சபை இதுவரையில் பெயர் விபரங்களை அறிவிக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.