இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு நடக்கும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
போட்டிகள் 2019 மே மாதம் 30-ம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு, இலங்கை அணியானது எதிர்கொள்ளும் முதல் போட்டி ஜூன் மாதம் 01ம் திகதி நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது.
இலங்கை அணி ஜூன் 04ம் திகதி ஆப்கானிஸ்தான் மற்றும் ஜூன் 07ம் திகதி பாகிஸ்தான் அணிகளுடன் மோதவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் முறையே பங்களாதேஷ்,அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இந்தியா உடன் ஆடவுள்ளது.
2019ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியானது கடந்த 1992-ம் ஆண்டு நடந்ததைப் போன்று ரவுண்ட் ராபின் முறையில், அதாவது ஒவ்வொரு அணியும் அனைத்து அணியுடனும் ஒருமுறை மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Rishma