உலகக்கிண்ண தொடரின் பின்னர் பல அதிரடியான மாற்றங்கள்

(FASTGOSSIP|COLOMBO) – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது அடுத்த மாதம் பங்களாதேஷூக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் வரலாற்று டெஸ்ட் தொடர் மற்றும் முக்கோண டி20 சர்வதேச தொடர் போன்ற இரு தொடர்களில் விளையாடவுள்ளது.

குறித்த இரு தொடர்களுக்குமான ஆப்கானிஸ்தான் அணியின் இரு குழாம்கள் பல மாற்றங்களுடன் நேற்று(20) அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் நிறைவுக்குவந்த உலகக்கிண்ண தொடரின் பின்னர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் பல அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதன்படி தற்போது புதிய அணித்தலைவராக சகலதுறை வீரர் ரஷீட் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஒற்றை டெஸ்ட் போட்டியானது அடுத்த மாதம் 5 – 9 ஆம் திகதி வரை சிட்டகொங்கில் நடைபெறவுள்ளது.

டெஸ்ட் போட்டிக்கான குழாம்:
ரஷீட் கான் (அணித்தலைவர்), அஸ்ஹர் அப்கான், முஹம்மட் நபி, இஹ்ஸானுல்லாஹ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷாஹ், ஹஸ்மதுல்லாஹ் சஹிடி, இக்ராம் அலிகில், ஸாஹிர் கான், ஜாவிட் அஹமதி, செயித் அஹமட் ஷிர்;ஷாட், யாமின் அஹமட்ஷாய், அப்ஸார் ஷஷாய், கைஸ் அஹமட், சபூர் சத்ரான்

முக்கோண டி20 தொடருக்கான குழாம்:
ரஷீட் கான் (அணித்தலைவர்), அஸ்ஹர் அப்கான், முஹம்மட் நபி, ஹஸ்ரதுல்லாஹ் ஷஷாய், நஜீப் தராகய், முஜீப் உர் ரஹ்மான், ஸரபுடீன் அஸ்ரப், நஜீப் ஸத்ரான், சஹிதுல்லாஹ் கமால், கரிம் ஜனாத், குல்பதின் நைப், பரீட் அஹமட், ஸபிகுல்லாஹ் ஸபாக், பஸால் நியாஸாய், தவ்லத் சத்ரான், நவீன் உல் ஹக், ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ்

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்குபற்றும் 7 போட்டிகள் கொண்ட முக்கோண டி20 சர்வதேச தொடரானது அடுத்த மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் கடந்த 2017ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து பெற்றதன் பின்னர் பங்களாதேஷ் அணியை முதல் முறையாக எதிர்த்தாடவுள்ளதன் காரணமாக இப்போட்டியானது வரலாற்று போட்டியாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.