பாதுகாப்பு குறித்து இந்தியா வெளிப்படையான அறிக்கை தரவில்லையெனில் பாகிஸ்தான் அணி டி20 உலகக்கிண்ணத்தில் பங்கேற்காது என்று ஷாரியார் கான் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் 8ம் திகதி முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை நடைபெறுகிறது.
இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி எதிர்வரும் மார்ச் 19ம் திகதி இமாச்சலப்பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நடக்கவுள்ளது.
ஆனால் இங்கு பாகிஸ்தானுக்கு எதிராக போட்டி நடத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதனால் போட்டியை நடத்த பாதுகாப்பு தர முடியாது என்று இமாச்சலப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் ஷாரியார் கான் கூறுகையில், இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலகக்கிண்ணப் போட்டிக்கு இமாச்சலப்பிரதேச அரசு பாதுகாப்பு தரமுடியாது என்று கூறிவிட்டது.
ஆனால் பிசிசிஐ இந்தப் போட்டிக்கு உரிய பாதுகாப்பு தருவதாக தனிப்பட்ட முறையில் கூறியது. ஆனால் இந்திய அரசு பாதுகாப்பு குறித்து வெளிப்படையான அறிக்கை தரவேண்டும். இல்லாவிட்டால் பாகிஸ்தான் அணி கடைசி நேரத்தில் கூட உலகக்கிண்ண தொடரில் இருந்து விலகும் என்று கூறியுள்ளார்.