மூத்த வீரர்களை அணிக்கு அழைத்து அவர்களுக்கு தலைமையினை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா நேற்று(20) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
அவ்வாறே சந்திக்க ஹத்துருசிங்க முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இதன்போது தெரிவித்திருந்தார்.
“டீ.எம் டில்ஷான் ஆகியோர் கூறியிருந்தனர், தேவை ஏற்பட்டால் ரிடைன்மென்ட் இலிருந்து வெளியே வந்து விளையாடுவதாக.. தற்போதுள்ள சந்தர்ப்பத்தில் தான் நினைக்கிறேன் மூத்த வீரர்களை அணிக்கு சேர்த்து அவர்களுக்கு தலைமைத்துவத்தினை வழங்க வேண்டும் என்பதே.. கிரிக்கெட் அணியினை மீண்டும் சரி செய்ய வேண்டும் உலகக் கிண்ணம் வரவுள்ளதால்.. அதற்காக இன்னும் 08 மாதங்களே உள்ளன. உடனடியாக மூத்த வீரர்களை ஒன்றுகூட்டி தீர்மானம் ஒன்று எட்டப்பட வேண்டும்.. இலங்கை அணியின் தேர்வுக் குழுவுக்கு பைத்தியம் போல்தான் தெரிகிறது.. ..”