உலகக் கிண்ணம் வரும் அனைத்து அணிகளையும் வீழ்த்தி வெற்றி பெரும் அணி தொடர்பில் டேரன் சமி ஆரூடம்

(FASTNEWS | COLOMBO) – மேற்கிந்திய தீவுகள் அணியானது இம்முறை உலகக் கிண்ண ஒருநாள் போட்டித் தொடரின் வெற்றியினை தனதாக்கிக் கொள்ளும் என அணியின் முன்னாள் தலைவர் டேரன் சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுடனான நேர்காணலில் தெரிவிக்கையில்;

“.. இது க்றிஸ் கெய்ஸ் இனது இறுதி உலகக் கிண்ணமாகும். ஆதலால் இம்முறை வெற்றி பெற அவரால் செய்ய முடிந்த அனைத்து உற்சாகத்தினையும் மேற்கொள்வார்.. கெய்ல் மீளவும் அணியில் சேர்ந்தது அணிக்கு பலமாக உள்ளது.. கெய்ல் அணியில் இருப்பது என்பது ஆத்ம நம்பிக்கையாகும் இது தொடர்பில் தான் அனுபவத்துடன் கூறுகிறேன். அவ்வாறே, அவருக்கு (கெய்ல்) விடை பெறும் பிரியாவிடையினை மேற்கிந்திய அணியானது பிரமாண்டமாக ஏற்பாடு செய்துள்ளதோடு, இம்முறை உலகக் கிண்ணத்தினை கட்டாயம் மேற்கிந்திய அணியானது கைப்பற்றும் என நம்புகிறேன். மேலும் தான் அதிகளவு “பைபிள்” இனை நம்புபவன். 40 என்பது பைபிளில் மிகவும் முக்கியமான எண்ணாகும். 1979 உலகக் கிண்ணத்தினை மேற்கிந்திய அணியானது கைப்பற்றி இவ்வருடத்துடன் 40 வருடம் பூர்த்தியாகிறது. இதனால் 2019ம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தினை மேற்கிந்திய அணியே வெல்லும் என்ற நிச்சயித்த நம்பிக்கை எனக்குண்டு…” என தெரிவித்துள்ளார்.