உலகக் கிண்ண ஒத்திவைப்பும் மாலிங்கவின் ஓய்வும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இருபதுக்கு 20 உலகக் கிண்ண 2021 ஆம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவை மீண்டும் ஒரு உலக கிண்ண நிகழ்வில் விளையாடுவதை பார்க்க முடியுமா என்பது கேள்விக் குறியாகும் என கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

107 விக்கெட்டுகளுடன் இருபதுக்கு-20 போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மாலிங்க, 2020ம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடருக்குப் பின்னர் ஓய்வு பெறுவதாக முன்னதாக அறிவித்திருந்தார்.

2021 உலகக் கோப்பையின் போது அவர் 38 வயதை கடந்திருப்பார். மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் போட்டியை மீண்டும் வெல்ல உதவிய மாலிங்கவுக்கு கடந்த ஆண்டு மிகச் சிறப்பாக இருந்தது, அதை தொடர்ந்து செப்டம்பர் 2019ல் நியூசிலாந்திற்கு எதிரான இருபதுக்கு-20 போட்டியில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது ரசிகர்கள் மத்தியில் நீங்கா நினைவலையாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

உடற்தகுதி ஒரு பிரச்சினையாக இருக்கும், ஆனால் அவரது திறனில் பிரச்சினை இருக்காது என பிரபல விளையாட்டு இணையதளம் அண்மையில் குறிப்பிட்டுள்ளது.

கிரிக்கெட் வட்டாரங்களின்படி, லசித் மாலிங்க இந்த ஆண்டின் பிற்பகுதியில் பெரும்பாலும் செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என நம்பப்படுகிறது.