உலகக் கிண்ண தொடருக்கு இலங்கை அணி நேரடியாக தகுதி பெறாமை தொடர்பில் மாலிங்க தன்னம்பிக்கை…

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடருக்கு இலங்கை அணி நேரடியாக தகுதி பெறாமை குறித்து தான் கவலையடைவதாக, சர்வதேச கிரிக்கெட் இணையத்தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இலங்கை அணியின் இருபதுக்கு -20 அணித் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;

“… இதனை சிறப்பான சந்தர்ப்பமாக நாங்கள் கருதுகிறோம். நாம் முதல் 09 அணிகளுக்குள் வருவோம் என அனைவரும் நினைத்திருந்தனர். எனினும் எமக்கு மேலுமொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த போட்டிக்கு முகங்கொடுக்க எமது அணி தயார் நிலையில் உள்ளது.

அதேபோல் , தரப்படுத்தலில் முதல் வரிசையில் உள்ள வீரர்கள் சிலர் எம்மிடம் உள்ளனர். நாங்கள் சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராக உள்ளோம்..”

2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடருக்கான குழு நிலை போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.