உலகக் கிண்ண போட்டித் தொடர் இடையே பாலியல் துன்புறுத்தல்கள்

(FASTGOSSIP | COLOMBO) – உலகக் கிண்ணப் போட்டிகளின் போது பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக கிண்ணப்போட்டிகள் குறித்து செய்தி சேகரிப்பில் ஈடுபடுகின்ற அனைத்து ஊடகவியலாளர்களிற்கும் அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில் ஐசிசி இதனை தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் வீரர்கள் உட்பட அதனுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் எதிர்மறையான தலையீடுகள் முறைகேடான நடத்தைகள் இன்றி உலக கிண்ணப் போட்டிகளை இரசிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

மைதானத்தில் நபர் ஒருவர் முறைகேடாக விதத்தில் நடந்து கொண்டால் அவரது அனுமதியை இரத்துச் செய்து அவரை வெளியேற்றுவதற்கான அதிகாரம் தனக்குள்ளதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் உட்பட அனைத்து வகையான துன்புறுத்தல்களில் ஈடுபடுபவர்களும் மைதானத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்,மேலும் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களும்,உடல்ரீதியான தாக்குதல்களில் ஈடுபடுபவர்களும், ஏனைய வகையிலான துர்நடத்ததைகளில் ஈடுபடுபவர்களும் மைதானத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் அல்லது அவர்களிற்கான அனுமதி தற்காலிகமாக இரத்துச் செய்யப்படலாம் எனவும் ஐசிசி மேலும் தெரிவித்துள்ளது.