உலகச் சந்தையில் தேயிலைகான விலை அதிகரிப்பு..

உலகச் சந்தையில் தேயிலையின் விலை அதிகரித்துள்ளதாகவும் இதற்கிணங்க தேயிலைக்கு நிலையான விலையொன்றைப் பெற்றுக் கொடுக்க முடியுமென்றும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேயிலை விலை குறைந்திருந்த போது அதனை வைத்து அரசாங்கத்தை குறை கூறியவர்கள் இப்போது விலையதிகரித்துள்ள போது அது தொடர்பில் மௌனம் சாதித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தேயிலை விலை குறைந்ததற்கும் அரசாங்கமே காரணம் என கூட்டு எதிர்க்கட்சினர் விமர்சித்தனர். கடந்த காலங்களில் உலகச் சந்தையில் தேயிலை விலை குறைந்தமைக்கு அரசாங்கம் எவ்விதத்திலும் காரணமாக முடியாது.

உலகச் சந்தையில் விலை குறையும் போது உள்நாட்டிலும் விலை குறைந்து அத்துறையில் வீழ்ச்சியேற்படுவது இயல்பு.

இதை அறியாத பந்துல குணவர்தன எம். பி. இப்போது தேயிலை விலை அதிகரித்துள்ள போது என்ன கூறுவார் எனப் பார்ப்போம். எவ்வாறாயினும் கடந்த காலங்களில் உலக சந்தையில் தேயிலை விலை பெரும் வீழ்ச்சி கண்டிருந்தது.

தற்போது அது வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தேயிலைக்கு நிலையான விலையொன்றை நிர்ணயிக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று(24) விவசாய அபிவிருத்தி அமைச்சு மீதான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்தார்.