நியூசிலாந்து முன்னாள் ரக்பி வீரர் ஜெர்ரி காலின்ஸ், மனைவி அலானா மேடில் கார் விபத்தில் மரணம் அடைந்துள்ளனர்.
நியூசிலாந்து ரக்பி அணியின் முன்னாள் வீரர் ஜெர்ரி காலின்ஸ் (34),கடந்த 2003, 2007 உலக கோப்பை தொடரில் பங்கேற்ற இவர், 3 முறை அணியின் கெப்டனாக இருந்தார்.
இவரது மனைவி அலானா. தனது இரண்டு மாத பெண் குழந்தையுடன் தெற்கு பிரான்சின் ஹெரால்ட் என்ற பகுதியில், நேற்று காலை காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பஸ் மோதியதில் கார் நசுங்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே காலின்ஸ், அலானா மேடில் மரணம் அடைந்தனர். குழந்தை காயத்துடன் தப்பிய போதும், மருத்துவமனையில் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டுள்ளது.