(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –உலகப் பொருளதார மாநாடு ஸ்விட்சர்லாந்தில் இன்று தொடங்க உள்ளது.
அந்நாட்டின் முக்கியமான சுற்றுலா நகரான டாவோஸில் தொடங்க உள்ள உலகப் பொருளாதாதர மன்றத்தில் 50 ஆண்டை முன்னிட்டு நடக்கும் இந்த மாநாட்டில் சமநிலையற்ற வருமானம், பருவநிலை மாற்றம் போன்ற சவால்களுக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இதில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரிட்டன் இளவரசர் சார்லஸ், ஜெர்மனி பிரதமர் மெர்கல், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்தியாவில் இருந்து அதானி, பஜாஜ், பிர்லா, மிட்டல் உள்ளிட்ட குழுமங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்ற உள்ளனர்.