உலகளவில் பாதிப்பு 16 இலட்சத்தை தாண்டியது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகளவில் கொரோன் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 இலட்சத்தை தாண்டியுள்ளது.

இதற்கமைய உலகில் இதுவரை 1,604,072 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், 95,731 பேர் குறித்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன், 356,656 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.