அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் `மெர்சல்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, உலகளவில் புதிய சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறது.
முதல் வாரத்திலேயே 20 லட்சம் பேரால் பார்க்கப்பட்டு இந்திய அளவில் புதிய சாதனையை படைந்திருந்த `மெர்சல்’ படத்தின் டீசர் தற்போது புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.
கடந்த செப்டம்பர் 21-ஆம் திகதி வெளியாகிய `மெர்சல்’ டீசரை இதுவரை (312 மணிநேரங்களில்) 2 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். தென்னிந்திய சினிமாவில் இது ஒரு புதிய மைல்கல்லாக அமைவதுடன் அதேபோல், 9 லட்சத்து 37 ஆயிரம் பேர் இந்த டீசரை லைக் செய்துள்ளனர்.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமான `மெர்சல்’ வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.